முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோர்ட்டில் ஆஜராகாததால் நோபல் பரிசு பெற்ற வல்லுனருக்கு பிடிவாரண்ட்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

டாக்கா : வங்கதேச பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸுக்கு நீதிமன்ற விசாரணையில் ஆஜராக தவறியதால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேச பொருளாதார வல்லுனரும், நோபல் பரிசு பெற்றவருமான 79 வயதான முகமது யூனுஸ் ஒரு பொருளாதார பேராசிரியரும் ஆவார். இவர் தலைமை தாங்கும் ஒரு நிறுவனத்தில் எந்தவித முகாந்திரமுமின்றி தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் ஆஜராக தவறியதால் முகமது யூனூஸ் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முகமது யூனூஸ் கடந்த 2006-ல் கிராமீன் கம்யூனிகேஷ்ன்ஸ் வங்கியைத் தொடங்கினார். மில்லியன் கணக்கான கிராமப்புற தொழில்முனைவோருக்கு சொத்துப்பிணை ஏதுமற்ற மைக்ரோ கடன்களை வழங்கியதால் அவரது பொருளாதார சிந்தனைக்காக நோபல் பரிசு இன்னொருவருடன் இணைத்து வழங்கப்பட்டது. ஆனால் அந்த வங்கி தற்போது ஹசீனாவால் நியமிக்கப்பட்ட மேலாளர்களால் நடத்தப்படுகிறது.

2007-ம் ஆண்டு முதல் நாட்டின் உயர்மட்ட அரசியல் இருதுருவங்களாக பிரிந்து கிடந்த போது யூனூஸ் அரசியலில் நுழைந்தார். அரசியலில் நுழைந்த சிறிதுகாலமே ஆன அச்சமயங்களில் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் அவர் முரண்பட்டார். இதனையடுத்து 2011-ம் ஆண்டில், அவரது கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் வங்கியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இந்த பதவி பறிப்பு நடவடிக்கையில் ஹசீனாவால் பங்கிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. யூனூஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

20 சதவிகிதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வங்கி வசூலிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஏழைகளிடமிருந்து இரத்தத்தை உறிஞ்சுவதாக ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஒரு மெகா பிரிட்ஜ் திட்டத்திற்காக உலக வங்கி 1.2 பில்லியன் டாலர் கடனை ஈட்டியதற்கு அவர் தான் காரணம் என்று பரிந்துரைத்தார்.
வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறித்து நீதிமன்ற எழுத்தர் எம். நூருஸ்மான் கூறியதாவது:-

டாக்காவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார், கிராமீன் கம்யூனிகேஷன்ஸ் (ஜி.சி) நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தை அமைத்ததால் அவர்கள் நீக்கப்பட்டதாக புகார் அளித்தனர். அதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் ஜி.சி.யின் தலைவராக இருக்கும் யூனூஸ், வெளிநாட்டில் இருந்ததால் விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனத்தின் மூத்த மேலாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். இந்நிலையில் ஜி.சி.தலைவர் என்ற முறையில் உரிய விசாரணையில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிமன்ற எழுத்தார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து