முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் மற்றும் சுதர்சனம் ஸ்பின்னிங் மற்றும் பேப்ரிக்ஸ் தொழிலாளர்களுக்கான 38வது விளையாட்டு போட்டிகள்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      விருதுநகர்
Image Unavailable

ராஜபாளையம் - ராஜபாளையம் ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில் மற்றும் சுதர்சனம் ஸ்பின்னிங் மற்றும் பேப்ரிக்ஸ் தொழிலாளர்களுக்கான 38வது விளையாட்டு விழா ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்றது.விழாவிற்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்கள் ராம்குமார்ராஜா,நளினிராமலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.முதுநிலைபொது மேலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.எச்.எம்.எஸ், ஏ.ஐ.டி.யூ.சி,ஐ. என்.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மகாலிங்கம்,ரமே~;,சுரே~; ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.தமிழக அரசின் தொழிற்சாலை பாதுகாப்புக்கான முதல் பரிசினை ஆலையின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீகண்டராஜா தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.மேலும் விழாவில் கடந்த ஆண்ட சிறப்பாக பணியாற்றி தொழிலாளர்கள், 15ஆண்டுகள் முதல் 35ஆண்டுகள் வரை ஊதிய இழப்பே இல்லாமல் பணிபுரிந்த தொழிலாளர்கள்,விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ராம்கோ குரூப் தலைமை இயக்க அதிகாரி மோகனரங்கன்,அதிகாரிகள்,தொழிற்சங்க நிர்வாகிகள்,ஊழியர்களின் குடும்பத்தினர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் துணைப்பொது மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து