முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி - பரமக்குடி கல்வி மாவட்ட அளவிவான அறிவியல் கண்காட்சி ,கணித கருத்தரங்கம் , அறிவியல் பெருவிழா மற்றும் ஆசிரியர் கண்காட்சி பரமக்குடி அலங்கார மாதா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த கண்காட்சிக்கு பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.கருணாநிதி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பால் கண்ணன், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் கல்பனாத் ராய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை ஆய்வாளர் ஆனந்த் வரவேற்றார். பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் கருணாநிதி கண்காட்சியை துவக்கி வைத்தார். இதில் 87 பள்ளிகளில் இருந்து 500 மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றன. மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு, மின்சார அலா ரமணி, மரம் நடுதல் போன்றவற்றை விளக்கும் வகையில் மாணவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர். கண்காட்சியில் அலங்கார மாதா மேல்நிலைப்பள்ளி தாளாளர் திரவியம், தலைமையாசிரியர் தன மேரி, கிழ முஸ்லிம்மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முனைவர் அஜ்மல்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் அனைவருக்கும் கல்வி இயக்க ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்ட பூபதி நன்றி கூறினார்.இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வரும் 18ந் தேதிபரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவினான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்பார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து