முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி கடல் எல்லையில் ஈரானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

ஜெத்தா : ஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலிய டேங்கர் கப்பல் மீது செங்கடல் பகுதியில் நேற்று ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.  

ஈரான் அரசுக்கு சொந்தமான 'சபிட்டி’ என்ற பெட்ரோலிய டேங்கர் கப்பல் பெட்ரோலிய கச்சா எண்ணையுடன் நேற்று செங்கடல் பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது.

ஜெத்தா துறைமுகத்தில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) நேற்று  காலை 5 மற்றும் 5.20 மணியளவில் கப்பலின் மீது இரு ஏவுகணைகள் அடுத்தடுத்து தாக்கின. 

இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த டேங்கரில் இருந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. கடலில் கலந்த கச்சா எண்ணெய் தொடர்பான செய்திகள் வெளியானதும் சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை  2 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து