முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க நாடாளுமன்றத்தில் காந்தியை போற்றி தீர்மானம்

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை யொட்டி அவரது போதனைகளை போற்றி அமெரிக்க நாடாளுமன்றத் தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்திய அமெரிக்கரான ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த தீர்மா னத்தை அவையில் கொண்டு வந்தார்.

அப்போது அவர் பேசும் போது,  மகாத்மா காந்தி என்னுடைய தனிப்பட்ட ஹீரோக்களுள் ஒருவர். பொது சேவைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வர் காந்தி. அவர் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். நம்ப முடியாத இன்னல்களை யும் அநீதியையும் எதிர்கொண் டாலும் கூட அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் சமத் துவம் கிடைப்பதற்காக நடத்திய போராட்டத்திலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. காந்தியின் போதனைகளைப் போற்றி இந்தத் தீர்மானத்தை கொண்டு வருவதற்கு பெருமை அடைகிறேன் என்றார். நாடாளுமன்ற பிரதிநிதிகள் ஜார்ஜ் ஹோல்டிங், பிராட் ஷெர்மேன், ஜோ வில்சன், கெர்ரி கன்னோலி, பீட்டர் கிங், அமி பேரா, ரோ கன்னா, பிராங்க் பல்லோன், பிரென்டா லாரன்ஸ், பீட் ஓல்சன், பிரமிளா ஜெயபால் டி.ஜே.காக்ஸ், டேவிட் பிரைஸ், டெட் யோஹோ உள்ளிட்டோரும் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து