வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி துவங்க வாய்ப்பு - வானிலை மைய இயக்குனர் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      தமிழகம்
northeast-monsoon 2019 10 09

சென்னை : வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கு கிழக்கு திசையில் காற்று வீசத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோபிசெட்டிப்பாளையத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியசும் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக கூறிய அவர், நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 44 சென்டி மீட்டர் மழையை தமிழகத்திற்கு தருவது இயல்பு எனவும் பாலசந்திரன் தெரிவித்தார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து