ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்: ரிசர்வ் வங்கி தகவல்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Rs-2000-notes 2019 10 14

புது டெல்லி : கள்ளநோட்டுகளை தடுக்க ரூ. 2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது. பயங்கரவாதிகளுக்கு நிதிஉதவி கிடைப்பதை தடுக்கவும், கருப்புப்பணம் பதுக்கலைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து ரூ. 500, ரூ.1000 நோட்டுகளுக்கு பதில் புதிதாக ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் வெளியிடப்பட்டன. ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் புதிய வடிவங்களில், புதிய வண்ணங்களில் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் ரிசர்வ் வங்கி அதை மறுத்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது. ஆனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கடந்த சில மாதங்களாக புழக்கம் இல்லாமல் குறைந்து போனது. ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கிடைப்பதும் குறைந்தது. சமீபகாலமாக பல இடங்களில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது பற்றி உண்மை நிலையை தெரிந்து கொள்ள ஆங்கில நாளிதழ் ஒன்று ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தி விட்டதாக அந்த பதிவில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி கூறியுள்ள பதிவில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2016-17ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது 3,542.991 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன.  2017-2018ம் ஆண்டு 111.507 கோடி எண்ணிக்கையில் அச்சிடப்பட்டன. 2018-2019ம் ஆண்டு 46.690 கோடி எண்ணிக்கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. ஆனால் 2019-20ம் நிதி ஆண்டில் ஒரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் அச்சிடப்படவில்லை. இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து