முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்: மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன்: ஐகோர்ட் கிளை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மதுரை  : நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித்சூர்யாவுக்கு அவரது தந்தைதான் வில்லன் என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா தந்தையை காவலில் எடுக்காதது ஏன்? என சி.பி.சி.ஐ.டி.க்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார்கள் என சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் குற்றம் நிகழ்ந்திருப்பது உண்மை என தெரியவந்துள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை மிகத் தீவிரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் ஐகோர்ட் கிளை கூறியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர் உதித் சூர்யாவின் ஜாமின் மனுக்கு மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. உதித் சூர்யா தந்தை தனது ஜாமின் மனுவை திரும்ப பெற்றால் மாணவரை விடுவிப்பது குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும் என கூறப்பட்டுள்ளது. உதித் சூர்யாவின் ஜாமின் மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார். மாணவர் உதித்சூர்யாக்கு ஜாமின் வழங்க கூடாது என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் மாணவரை ஜாமினில் விடுவிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பு வாதம் செய்து வருகிறது. வெங்கடேசன் உள்ளிட்டோர் உண்மையான காரணத்தை சொல்ல மறுப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து