எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு தீபாவளித் திருநாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு 2018-19ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000- என உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பும் ரூ.7,000- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2018-19-ம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக் கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டிபிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்டதை போல, இந்த ஆண்டும் 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் ஒதுக்கக் கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையோ வழங்கப்படும். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். ஒதுக்கக் கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் சி’ மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000-ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000- ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000- ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400- ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400-ம் அதிகபட்சம் ரூ.16,800-ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 48 ஆயிரத்து 503 தொழிலாளர்களுக்கு 472 கோடியே 65 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.