முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல் போக சாகுபடிக்காக தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ், தண்ணீரை திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தேனி
Image Unavailable

      தேனி,-தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர்             ம.பல்லவி பல்தேவ், தண்ணீரை திறந்து வைத்து,   தெரிவித்ததாவது,
     தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், தென்கரை கிராமம், வராகநதி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சோத்துப்பாறை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயிகளின் நலன் கருதி பாசனத்திற்காகவும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்காகவும், இன்றைய தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1825 ஏக்கர் பழைய நன்செய் பாசன நிலங்களும், 1040 ஏக்கர் புதிய புன்செய் பாசன நிலங்களும், என மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
          இதில், முதல்போக சாகுபடிக்காக 15.10.2019 முதல் 15.12.2019 வரை 62 நாட்களுக்கு வினாடிக்கு 30 கனஅடி வீதமும், 16.12.2019 முதல் 15.01.2020 வரை 31 நாட்களுக்கு வினாடிக்கு 27 கனஅடி வீதமும், 16.01.2020 முதல் 15.03.2020 வரை உள்ள 59 நாட்களுக்கு வினாடிக்கு 25 கனஅடி வீதமும் ஆக மொத்தம் 152 நாட்களுக்கு 360.46 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும், நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து, தண்ணீர் திறந்து விடப்படும்.
     மேலும், இதன்; மூலம் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட தென்கரை, லெட்சுமிபுரம், தாமரைக்குளம், ஆகிய கிராமங்கள் பாசன வசதிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்   ம.பல்லவி பல்தேவ்,  தெரிவித்தார்.
     இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, செயற்பொறியாளர் எஸ்.கவிதா, பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ச.ஜெயப்பிரித்தா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் தமிழ்செல்வன், பெரியகுளம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஓ.ராஜா, பெரியகுளம் வட்டாட்சியர் ரத்தினமாலா மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து