முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் அவசரகால தீவிபத்து தடுப்பு ஒத்திகை:

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டால் அதனை எவ்வாறு தடுத்திடுவது என்பது குறித்த அவசரகால தீவிபத்து தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி ஐ.ஓ.சி டெர்மினல் துணை பொதுமேலாளர் ஸ்ரீஹரிநாத் தலையில் சிறப்புடன் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இங்கு சென்னை மணலியிலிருந்து குழாய்கள் மூலம் கொண்டுவரப்படும் பெட்ரோல்,டீசல்,மண்எண்ணை உள்ளிட்ட எரிபொருட்கள் இங்குள்ள ராட்சத டேங்குகளில் நிரப்பப்பட்டு தென்தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு  டேங்கர் லாரிகள் மூலமாக எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.உச்சகட்ட கண்காணிப்பு நிறைந்த இந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் எரிபொருள் நிரப்பி வைத்திருக்கும் ராட்சத டேங்க் பகுதியில் திடீரென்று தீவிபத்து எற்பட்டால் எவ்வாறு தடுத்திடுவது என்பது குறித்த  தீவிபத்து தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.இதன் ஒருபகுதியாக  டேங்க் பகுதியிலிருந்து கசிந்த எரிபொருளால் தீப்பற்றிக் கொண்டதாக எச்சரிக்கை அலாரம் ஒலிக்கப்பட்டது.இதையடுத்து பிளான்ட்டில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த இதர டேங்கர் லாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு பணியாளர்கள் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட பகுதியை சுற்றிவளைத்து மின்னல் வேகத்தில் தண்ணீர் மற்றும் நுரையை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருப்பினும் வெப்பத்தின் காரணமாக மற்ற ராட்சத டேங்கர்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக  அவற்றின் மீதும் தண்;ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டது.தீயணைப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போதே  அங்கு காயமடைந்து கிடந்த ஊழியர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிடும் நிகழ்ச்சியும் தத்ருபமாக செய்து காட்டப்பட்டது.அதே சமயம் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு படையினரும் தீயணைப்பு நிகழ்வில் பங்கேற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பாக செயலாற்றினார்கள்.
இந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை நிகழச்சிகள் அனைத்தையும் தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் பாலகிருஷ்ணன்,தொழிற்சாலை பாதுகாப்பு துணை இயக்குனர் ராஜ்குமார்,துணை இயக்குனர்ஜெயமுருகன்,திருமங்கலம்டவுன் சார்பு ஆய்வாளர் அன்பழகன்,ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரி அருண் தாமஸ்,திருமங்கலம் தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் சதக்கத்துல்லா,பாரத் பெட்ரோலிய நிறுவ அதிகாரி பாவின் ஜோஜோ,தெற்கு ரயில்வே பாதுகாப்பு அதிகாரி காசிராஜன்,மதுரை இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் திருமுருகானந்தம்உள்ளிடோர் கலந்து கொண்டனர்.பின்னர் இந்த அவசர கால ஒத்திகை தீயணைப்பு நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தங்களது கருத்துக்களை அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த நிகழ்வின் நிறைவில் கப்பலூர் ஐ.ஓ.சி டெர்மினல் துணை பொதுமேலாளர் ஸ்ரீஹரிநாத் ஏற்புரையாற்றி நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து