முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரிய பிரபல பாப் பாடகி மரணம்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

சியோல் : மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி சுல்லி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி சுல்லி(25). இவர் வெப்சீரிஸ் எனப்படும் இணைய தொடர்களில் நடித்தும் புகழ்பெற்றவர். பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக நோ பிரா (உள்ளாடை இல்லை) புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுல்லி, மேலாடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் சமூக ஊடகத்தில் மிகக் கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத அவர், பலமுறை இன்ஸ்டாகிராம் நேரலையில் மேலாடையின்றி தோன்றி அதிரவைத்து வந்தார். இதனால் அவர் பழமைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார்.

இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள தனது வீட்டில் சுல்லி பிணமாக கிடந்தார். அவரது மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து விசாரித்து வரும் போலீசார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சுல்லியின் நெருங்கிய தோழியும், சக பாப் பாடகியுமான ஜாங்கியூன் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து