முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு வங்கிக்காக அரசியல் செய்யும் காங்கிரசால் தேசத்துக்கான நிலைப்பாடு எடுக்க முடியாது - அமித் ஷா கடும் தாக்கு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : வாக்கு வங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ் கட்சியால் தேசத்துக்கான நிலைப்பாடு எடுக்க முடியாது என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கூறினார்.

அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 90 தொகுதிகளைக் கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில், பா.ஜ.க.வை ஆட் சியை விட்டு அகற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதே சமயத்தில், ஆட்சியை தக்க வைப்பதற்காக பா.ஜ.க.வும் இரவு - பகலாக களப் பணியாற்றி வருகிறது. இவை தவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஜனநாயக ஜனதா ஆகிய கட்சி களும் தனித்தனியே போட்டியிடுவதால் அரியானாவில் பல முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் அரியானா மாநிலம் தியோகவனில் நடந்த பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மாநிலம் முழுமையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு எந்த ஒரு பிரதமரும் எடுக்கத் துணியாத தேவையான நடவடிக்கையை பிரதமர் மோடி மட்டுமே எடுத்தார். பா.ஜ.க. மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளன. ஆனால் காங்கிரஸ் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சினையில் அரசை குறை சொல்கிறது. அதே சமயம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அதற்கு காரணம் வாக்கு வங்கி அரசியல் தான். காங்கிரஸ் கட்சிக்கு துணிவு இருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அவர்கள் பேச மாட்டர்கள். ஏனென்றால் அவர்களுக்கு வாக்கு வங்கி அரசியல் மிக முக்கியம். 1990-ம் ஆண்டு முதல் இன்று வரை காஷ்மீர் இளைஞர்களின் கைகளில் ஆயுதங்களை கொடுத்து பாகிஸ்தான் தூண்டி விட்டது. தீவிரவாதத்தில் 40 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். அந்த மாநிலத்தில் தற்போது தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு வருகிறது. அமைதி திரும்பி வருகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து