முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் சிங் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலையில் இருந்தன - மத்திய அமைச்சர் நிர்மலா சீதராமன் பேச்சு

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

நியூயார்க் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் காலத்தில் பொதுத்துறை வங்கிகள் மோசமான நிலையில் இருந்தன என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், இந்திய பொருளாதார கொள்கைகள் குறித்த விரிவுரை நிகழ்வு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய பொத்துத்துறை வங்கிகள் அனைத்தும் தற்போது நிலைத்தன்மையோடு செயல்படுகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் இந்திய பொருளாதாரம் அனைத்தும் நடுநிலையில் தான் இருந்தது. அந்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனை நான் பாராட்டுகிறேன், ஆனால் அவர்களது கூட்டமைப்பில் பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிலையில் இருந்தன. ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த காலத்தில்தான் முக்கிய தலைவர்களுக்கு, தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் மட்டுமே கடன்கள் வழங்கப்பட்டன. அந்த முறையில் இருந்து பொதுத்துறை வங்கிகள் வெளியேற அரசின் நடுநிலைதன்மையை உள்வாங்க வேண்டிய நிலையில் உள்ளது. சமீபத்தில் பிரவுன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய ரகுராம் ராஜன், மோடி அரசாங்கம் பொருளாதாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அடைவதில் மோடி அரசிற்கு தெளிவான பார்வை இல்லை என கூறினார். ஆனால் மன்மோகன் சிங் ஆட்சியில் அதே தெளிவான பார்வை இருந்தது. அதனால் தான் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த காலத்தில் பொத்துறை வங்கிக் கடன்களில் பெரும் சிக்கல்கள் இருந்தன. நான் யாரையும் குறைகூறும் நோக்கில் பேசவில்லை. ஆனால் ரகுராம் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் வருத்தப்படுவார். மன்மோகன் சிங் மற்றும் ரகுராம் ராஜன்  கூட்டமைப்பில் பொத்துறை வங்கிகள் மிகப்பெரிய சிக்கல்களை சந்தித்தன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, பேராசிரியரும் பிரபல பொருளாதார நிபுணருமான ஜெகதீஷ் பகவதி மற்றும் நியூயார்க்கில் உள்ள இந்தியாவின் துணைத் தூதர் சந்தீப் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து