முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபிஜித் பானர்ஜி, கங்குலியால் வங்காளத்துக்கு பெருமை - மம்தா பானர்ஜி புகழாரம்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூஃப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். நோபல் பரிசு வென்ற நிபுணர்களில் ஒருவரான அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ. தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வங்காளத்தில் பிறந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றுள்ளார். இதே போல், பி.சி.சி.ஐ. தலைவராக சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அபிஜித் பானர்ஜி மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரால் வங்காளத்துக்கு பெருமை சேர்ந்துள்ளது. இவர்கள் போன்றோரால் வங்காளம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து