முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிக்ஸ் பேக் உடற்கட்டு படத்தை வெளியிட்ட வீரர் விஜய் சங்கர்

புதன்கிழமை, 16 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்ட படத்தை டுவிட்டரில் வெளியிட்டதை கண்டு ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர். 28 வயதாகும் இவர் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். ஹர்திக் பாண்டியா இல்லாத நேரத்தில் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இடம் பிடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, பேட்ஸ்மேன் வரிசையிலும் களம் இறக்கப்பட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம் பிடித்திருந்தார். இரண்டு முறை காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாமல் இந்தியா திரும்பினார். அதன்பின் இதுவரை இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவரது உடலமைப்பு விளையாட்டு வீரர்களுக்கு இருப்பது போன்று இருக்காது. ஆனால் தற்போது கடுமையான உடற்பயிற்சி மூலம் சிக்ஸ் பேக் உடலமைப்பை கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து