சிரியாவில் போர் நிறுத்தம் - துருக்கி அரசு ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      உலகம்
Syria - Turkish government 2019 10 18

சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  
சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள் சிரியாவை விட்டு வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது. இந்த கொடூர தாக்குதல்களில், குர்து போரளிகள் மற்றும் அப்பாவி மக்கள் என மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

உலக நாடுகள் துருக்கியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்கா, துருக்கி நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து அச்சுறுத்தியது. துருக்கி அதிபருக்கு டிரம்ப் போர் நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி கடிதம் எழுதினார். ஆனால் துருக்கி அரசு இவை எதையுமே கருத்தில் கொள்ளாமல் தாக்குதல்களை தொடர்ந்தது.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சும், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் துருக்கிக்கு விரைந்தனர்.

இந்நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்துள்ளார். துருக்கி நதிபர் எர்டோகன் மற்றும் மைக் பென்ஸ் இடையே நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கையால் ஏற்படும் பேரிழப்புகளை தவிர்ப்பதே தனது முதல் பணி என பென்ஸ் தெரிவித்தார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து