முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா காந்தி பிரசாரம் ரத்து - அரியானா காங்கிரசார் ஏமாற்றம்

வெள்ளிக்கிழமை, 18 அக்டோபர் 2019      அரசியல்
Image Unavailable

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரது அரியானா தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் உள்ளார்.
கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது அவர் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் மே 2-ந்தேதி ஒருநாள் மட்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அவர் அந்த தொகுதிக்கு சென்று ஒரே ஒரு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசினார். அதன் பிறகு அவர் இதுவரை எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா பொறுப்பேற்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களை மட்டுமே சந்திக்கும் சோனியா வருகிற 21-ந்தேதி நடைபெற உள்ள அரியானா, மகாராஷ்டிரா ஆகிய இரு மாநில சட்டசபை தேர்தலுக்காக பிரசாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரு மாநில காங்கிரஸ் தலைவர்களும் அவரை போட்டி போட்டு அழைத்தனர். ஆனால் சோனியா அரியானா மாநிலம் மகேந்திரகர் நகரில் நேற்று  (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்ய ஒத்துக்கொண்டார். இதையடுத்து மகேந்திரகர் நகரில் சோனியாவை வரவேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் நேற்று காலை சோனியாவின் பிரசார பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த தகவலை அரியானா மாநில மூத்த தலைவர் ஒருவர் உறுதி செய்தார். 

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகேந்திரகர் நகரில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா பங்கேற்க இயலவில்லை. அவருக்கு பதில் ராகுல் பங்கேற்று பிரசாரம் செய்வார் என்று கூறியுள்ளார்.  சோனியா காந்திக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரது தேர்தல் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.சோனியா பிரசாரம் ரத்து ஆனதால் அரியானா மாநில காங்கிரசார் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து