ரஷ்யாவில் அணை உடைந்து 12 பேர் பலி

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      உலகம்
russia dam collapse 2019 10 19

மாஸ்கோ : ரஷ்யாவில் அணை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் தங்கச் சுரங்கம் உள்ளது. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும்  நீரை சேமிப்பதற்கு அங்கு தொழில்நுட்ப நீர்த்தேக்கம் கட்டப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு சுமார் 270 பணியாளர்கள் சுரங்கத்தினுள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  நள்ளிரவு 2 மணியளவில் திடீரென சுரங்கத்தின் மேல் உள்ள நீர்த்தேக்கம் உடைந்தது. இதையடுத்து தண்ணீர் சுரங்கத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் 12 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். மேலும், ரஷ்ய அவசர அமைச்சகத்தின் சைபீரியா மீட்பு மையத்தை சேர்ந்த 200 பணியாளர்கள், 5 எம்.ஐ. -8 ஹெலிகாப்டர்கள் மற்றும் எம்.ஐ. -26 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஒரு விமானப் பிரிவும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டன. சுரங்கத்தினுள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து