விண்வெளியில் நடந்து சாதனை படைத்த 2 பெண்களுக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      உலகம்
trump compliment space 2 women 2019 10 19

வாஷிங்டன் : நாசா விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். அவர்களுக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனைகள் கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெஸிகா மீர் இருவரும் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். ஆண்களின்றி இரு பெண்கள் மட்டும் தனியாக விண்வெளியில் நடந்து, பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும். இதன்மூலம், உலக விண்வெளி ஆய்வு வரலாற்றில், இரு வீராங்கனைகளும் புதிய சாதனையை நிகழ்த்தி செய்துள்ளனர். இரு விண்வெளி வீராங்கனைகளின் இந்த சாதனைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்  பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து