தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை மைய தலைவர் பாலசந்திரன் தகவல்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
rain 2019 09 12

சென்னை : தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழகம், தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா  பகுதிகளில் வட கிழக்கு பருவமழை கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.  இந்நிலையில் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை மிதமாக பெய்துள்ளது, ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.

குறிப்பாக குமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 13 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 12 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் வேதச்சந்தூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து