முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நலிந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான் உங்கள் வேலை - மத்திய அரசை டுவிட்டரில் சாடிய பிரியங்கா

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நலிந்துள்ள பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான் உங்கள் வேலை. அதை விடுத்து காமெடி சர்க்கஸ் செய்யாதீர்கள் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இந்தியர் அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் மோசமான சூழலில் இருப்பதாகவும், உடனடியாக சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்தும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன்தினம் புனே நகரில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது கூறுகையில், நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். ஆனால் பானர்ஜி ஒருசார்புடைய சிந்தனையாளர் போன்று பேசுகிறார். காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டமான குறைந்தபட்ச வருவாய் கிடைக்கும் திட்டத்தை மக்கள் புறக்கணித்து விட்டார்கள். அந்தத் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை. அதைப் பற்றிச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரி்ல் கருத்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வினர் தங்களின் வேலையைப் பார்ப்பதற்குப் பதிலாக, பிறரின் சாதனைகளை பொய்யாக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைகிறார்கள். நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தனது பணியை நேர்மையாக செய்து நோபல் பரிசு வென்றுள்ளார். இங்கு பொருளாதாரம் சீர்குலைந்து வருகிறது. உங்கள் பணி பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். அதை விடுத்து இவ்வாறு காமெடி சர்க்கஸ் நடத்துவது அல்ல என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கடந்த செப்டம்பர் மாதமும் ஆட்டோமொபைல் துறை விற்பனை குறைந்ததற்கான அறிக்கையைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து