முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. நாளை 21-ம் தேதி இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யாகி இருப்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி காலியாக உள்ளது. இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலி இடமாக இருந்தது. இந்த இரு தொகுதிகளுக்கும் நாளை 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ் செல்வன், தி.மு.க. சார்பில் புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

நாங்குநேரியில் மொத்தம் 23 வேட்பாளர்களும், விக்கிரவாண்டியில் 8 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். கடந்த 2 வாரமாக 2 தொகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த தொகுதிகளில் அ.தி.மு.க.- தி.மு.க. கூட்டணி இடையே நேரடி பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. முன்னதாக இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.-தி.மு.க. மூத்த தலைவர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மொத்தம் 6 நாட்கள் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அதே போல் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் 15-ம் தேதி முதல் 6 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

கடந்த 8, 9, 10-ம் தேதிகளில் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15, 16-ம் தேதிகளில் 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதே போல் வைகோ, முத்தரசன், நல்லக்கண்ணு, பிரேமலதா, ஜி.கே.வாசன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்களும் நாங்குநேரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் நேற்று முன்தினம்  மாலை இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

பின்னர் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பாளை கே.டி.சி. நகர், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, பொன்னாக்குடி, முன்னீர்பள்ளம் ஆகிய பகுதிகளுக்கு திறந்த வேனில் சென்று இரட்டை இலைக்கு வாக்குசேகரித்தார். விக்கிரவாண்டி தொகுதியிலும் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது.

நாங்குநேரி தொகுதியில் மொத்தம் 299 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதியில் 1,400 பேர் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 225 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அங்கும் சுமார் 1000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

இரண்டு தொகுதிகளிலும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். 

அதிகளவு ஓட்டுப்பதிவை பெற வேண்டும் என்பதற்காக வாக்குப்பதிவு தினமான 21-ம் தேதி இரு தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சாலைகள் மட்டுமின்றி நாளை 21-ம் தேதி பள்ளி -கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நேற்று இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததையடுத்து நாளை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் 24-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மராட்டியம், அரியானா மாநிலங்களில் வரும் 21-ம் தேதி சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து இந்த இரண்டு மாநிலங்களிலும் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் செய்தார். ராகுல் காந்தி ஒருசில நாட்கள் பிரச்சாரம் செய்த நிலையில் நேற்று இந்த இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. நாளை அங்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து