முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் நடத்திய அத்துமீறி தாக்குதலுக்கு பதிலடி: பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலி - 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

ஸ்ரீநகர் : பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அங்கு அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கியதை தொடர்ந்து அங்கு வன்முறையை ஏற்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய திட்டம் வகுத்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி அந்நாட்டு ராணுவம் தேவையற்ற தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். குப்வாரா மாவட்டத்தின் தங்கார் பகுதியின் எல்லையோரம் அமைந்துள்ள பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்தியாவிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் உதவுவதை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவ அத்துமீறலின் போது 2 இந்திய வீரர்கள், பொது மக்களில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ராணுவம் மீது பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடி தாக்குதலில் 5 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு உள்ள நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்கள் இந்திய தாக்குதலில் தகர்ந்தன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தாங்தார் எல்லையில்  பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து