முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள தீவிற்கு மாற்றம் செய்ய முடிவு

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

டாக்கா : வங்கதேசத்தில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்களை வங்கக்கடலில் உள்ள தீவிற்கு இடமாற்றம் செய்ய வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

மியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நிகழ்ந்த ராணுவ அடக்குமுறையால், சுமார் 7,40,000 பேர் மியான்மரில் இருந்து வங்கதேசத்திற்கு இடம்பெயர்ந்தனர். வங்கதேசத்தில் ஏற்கனவே 2,00,000 ரோஹிங்கியாக்கள் அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து வங்கதேசத்தின் தெற்கு கடற்கரையோரம் தற்போது சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவி வரும் ஜன நெருக்கடியை குறைக்க வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதன் முதற்கட்டமாக சில ஆயிரம் ரோஹிங்கியா மக்களை வங்கக் கடலில் உள்ள ஒரு தீவில் தங்கவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீவிற்கு அருகில் உள்ள ஹதியா என்ற தீவு மக்கள் கூறுகையில், வருட இறுதியில் மழைக் காலத்தின் போது அந்த தீவு கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் யாரும் அங்கே செல்ல முடியாது. அந்த தீவு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடம் அல்ல என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த தீவில் மக்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. பருவமழைக் காலங்களில் கடல் அலைகளில் இருந்து பாதுகாப்பதற்காக 9 அடி உயர தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரோஹிங்கியா குழு தலைவர்கள் அங்கு சென்று பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து