கனடா தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      உலகம்
Justin Trudeau win canada election 2019 10 22

டொராண்டோ : கனடா தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆனால் பெரும்பான்மையை இழந்து உள்ளது.

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக போட்டியிட்டார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ ஆரம்ப காலத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தார். ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தது மற்றும் இனவெறியை தூண்டும் வகையிலான அவரது பழைய புகைப்படங்கள் வெளியானது ஆகியவை அவரின் செல்வாக்கை சரிய செய்தது. இந்த தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறாது என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் வாக்களித்த 338 இடங்களில் 156 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சி வெற்றி பெற்றது. இது இரண்டாவது நேரடியான பெரும்பான்மை அரசாங்கத்திற்கு தேவையான 170 இடங்களை விட மிகக் குறைவு. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி  121 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. லிபரல் கட்சியை, இடதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் என கூறப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோ நேற்று மாண்ட்ரீலில் ஆதரவாளர்களிடம் பேசும்போது,  நீங்கள் என்னை வெற்றி பெற  செய்தீர்கள், நண்பர்களே. வாழ்த்துக்கள். அனவருக்காகவும் ஆட்சி செய்வோம் என கூறினார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து