பதிலடிக்கு எப்போதுமே இந்தியா தயங்கியதில்லை: ராஜ்நாத்சிங்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      இந்தியா
rajnath singh 2019 09 29

மும்பை : இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்கு சென்றதில்லை. ஆனால் அத்துமீறல்கள் நடைபெறும்போது தட்டிக் கேட்கத் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். மும்பையில் நேற்று கடற்படை தளபதிகள் மாநாட்டை தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது, இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் தானாக சண்டைக்கு சென்றதில்லை. ஏன், ஓர் அங்குல அந்நிய நிலப்பரப்பைக்கூட ஆக்கிரமித்ததில்லை. அதே வேளையில் நம் மீது அத்துமீறல்கள் நடக்கும் போது தகுந்த பதிலடியை வழங்க இந்தியப் படைகள் தவறியதே இல்லை. கடற்படையின் கண்காணிப்பில் கடல் வழிப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது. மும்பை தாக்குதல் போல் மீண்டும் ஒரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க கடற்படை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

முன்னதாக, பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீது அகமது, ஜம்மு காஷ்மீரின் தாங்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்ந்தால், இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என எச்சரித்திருந்தார். இதனை மறைமுகமாக சுட்டிக்காட்டியே ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து