முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் மது ஓழிப்பு சாத்தியமில்லை படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் - அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஒரே நாளில் மதுவை ஓழிக்க முடியாது. மதுவிலக்கை படிப்படியாகத் தான் கொண்டு வர முடியும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை மையத்தில் நேற்று அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் பயிற்சித் திட்ட விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நம் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கை இருமொழிக் கொள்கை. தமிழ்நாட்டுக்கு தமிழ்தான் முதன்மை மொழி. இணைப்பு மொழி ஆங்கிலம். இந்தியைத் திணிக்கக் கூடாது. இந்தியா என்பது கூட்டமைப்பு. மொழித் திணிப்பு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இருமொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தல் நடக்கும் இடத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உள்ளது. இதனை அனைவரும் கடைபிடிப்பதுதான் குடிமக்களின் கடமை.19-ம் தேதியே யாரும்

தொகுதிக்குள் போகக்கூடாது என்ற நிலையில் வசந்தகுமார் எம்.பி. தொகுதிக்குள் சென்றார் என்றால் அது தவறுதானே!. இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மது கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. இதில்உறுதியாக இருக்கிறோம். ஆனால் ஒரே நாளில் மதுவை ஒழிக்க முடியாது. படிப்படியாகதான் ஒழிக்க முடியும். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை முழுமையாக நாம் செய்து வருகிறோம். அது அனைவரிடமும் சென்று சேர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு, மதுவே யாருக்கும் தேவையில்லை என்ற முடிவில் எல்லோரும் இருந்தால் மது வியாபாரம் ஆகாது. உடனடியாக மது கடைகளை மூடி விட்டால் கள்ளச் சாராயம் பெருகும். தி.மு.க. ஆட்சியில் மதுவை கொண்டு வந்தார்கள். அப்போது மது வேண்டாம் என்று அனைவரும் கேட்டுக் கொண்டார்கள். அனைத்தையும் மீறி மதுவை கொண்டு வந்து, அந்த பழக்கத்திற்கு ஆட்கொண்டு விட்டார்கள். எம்.ஜி.ஆர். மது தேவையில்லை என்று கடுமையான சட்டம் கொண்டு வந்தார். விளைவு கள்ள சாராயம் சாப்பிட்டு நிறைய பேர் இறந்தனர். அதன் பாதிப்பை எம்.ஜி.ஆர். உணர்ந்து, வேறு வழி இல்லாமல், மரணத்தை தவிர்க்கும் வகையில் மது கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து