முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்: ஒருவர் காயம்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் உயர்நிலைப்பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் மற்றொரு மாணவன் படுகாயமடைந்தான்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சாண்டா ரோசா நகரில் உள்ள ரிட்க்வே உயர்நிலைப்பள்ளி வளாகத்தின் முன்பு 16 வயது மாணவன் ஒருவன் அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தின் போது இரு மாணவர்களும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அதில் ஒருவன் திடீரென தன்னுடைய பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட்டதில் மற்றொரு மாணவன் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. அதன் பிறகு அந்த துப்பாக்கியை ஒரு பையில் வைத்து மற்றொரு நபரிடம் கொடுத்த மாணவன், பின்னர் எதுவும் நடக்காதது போல் வகுப்பறையில் வந்து அமர்ந்துள்ளான். துப்பாக்கியை பெற்றுக் கொண்ட அந்த நபர் சம்பவ இடத்தை விட்டு சென்று விட்டார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மாணவனை அந்த இடத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவனை கைது செய்தனர். துப்பாக்கியை வாங்கி சென்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில், பள்ளி மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து