முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை: நாசா அறிவிப்பு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : நிலவுக்கு அனுப்பிய விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவியது. அதில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி அதிகாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் சமயத்தில் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்தனர். மேலும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள சமிக்ஞைகளை அனுப்பியது. ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இதனால் நிலவின் தரையில் விக்ரம் லேண்டர் மோதி நொறுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 14 நாட்கள் மட்டுமே ஆயுட் காலம் கொண்ட விக்ரம் லேண்டர் நிலவின் எந்த பகுதியில் வேகமாக தரையிறங்கி இருக்கும் என்று கணிக்கப்பட்டது. இதையடுத்து நிலவை சுற்றும் ஆர்பிட்டர் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதே போல் நாசாவின் ஆர்பிட்டர் மூலமும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் இதில் விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நாசாவின் ஆர்பிட்டர் நிலவின் தென் துருவ பகுதிக்கு சமீபத்தில் சென்று புகைப்படங்களை எடுத்தது. இதில் விக்ரம் லேண்டர் விழுந்ததாக கருதப்படும் இடங்களை புகைப்படம் எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. புகைப்படங்களில் விக்ரம் லேண்டர் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை என்றும் ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களை கேமரா குழு கவனமாக ஆய்வு செய்தது. ஆனாலும் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 17-ம் தேதி ஆர்பிட்டர் அனுப்பிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து