முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. தலைவராக பதவியேற்றார் கங்குலி பொறுப்பை ஒப்படைத்தார் வினோத் ராய்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.

மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு தேர்தல் முடிந்த நிலையில், பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவரே ஒருமனதாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம், மும்பையில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில், கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தின் 39-வது தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். கங்குலி தலைமையில் கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை தலைவர் பதவியில் இருக்கும் சவுரவ் கங்குலி, முதல் தர கிரிக்கெட் போட்டிகளை மேம்படுத்த உள்ளதாக உறுதியளித்துள்ளார். மேலும், கிரிக்கெட் வாரியத்தின் பெருமையை மீட்டெடுக்க உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார். அவர் பதவியில் இருக்கப் போகும் 10 மாதங்களில், நிர்வாகத்தை சீரமைப்பது, இரட்டை ஆதாய பதவி விவகாரம், முதல் தர கிரிக்கெட்டை செம்மைப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இதன் மூலம் 33 மாதங்களாக இருந்த நிர்வாக குழுவின் கட்டுப்பாடு முடிவுக்கு வருகிறது. பி.சி.சி.ஐ.யின் செயலாளராக உள்ள உள்துறை அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும், துணை தலைவராக உத்தரகாண்டை சேர்ந்த மஹிம் வர்மாவும் பொறுப்பேற்ற இருக்கிறார்கள். பி.சி.சி.ஐ.யின் முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான அனுராக் தாகூரேவின் சகோதரர் அருண் துமல் பொருளாளராகவும், இணை செயலாளராக கேரளாவை சேர்ந்த ஜெயேஷ் ஜார்ஜ் பொறுப்பேற்ற இருக்கின்றனர். முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதனை சீரமைப்பதற்காக நீதிபதி லோதா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றாததால் பி.சி.சி.ஐ.யின் தலைவர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. பி.சி.சி.ஐ. நிர்வகிக்க சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்படி நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டது. புதிதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள் பதவியேற்றவுடன் இந்த குழு பதவி விலக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து