முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் 10 பைசாவிற்கு டி_ஷர்ட் வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் 10 பைசாவிற்கு டி_ஷர்ட் வாங்க அதிகாலையில் ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பான உலகில் பழமையான பொருட்களை பாதுகாக்கும் பழக்கம் பொதுமக்களிடம் குறைந்து கொண்டே வருகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் மாற்றம் என்பதை உணர்ந்து பழைய பொருட்களை கழித்துக் கொண்டே வருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால் பழைய 10 பைசாவிற்கு ஒரு டி_ஷர்ட் என்ற அறிவிப்பை திண்டுக்கல் சந்துக்கடையை சேர்ந்த ஒரு ஜவுளிக்கடை உரிமையாளர் அறிவித்தார். இதனையடுத்து அதிகாலையில் டி_ஷர்ட் வாங்குவதற்காக ஏராளமான ஆண்கள் குவிந்தனர். வாலிபர்கள் மட்டுமின்றி முதியவர்களும், சிறுவர்களும் டி_ஷர்ட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே டி_ஷர்ட் என்ற அறிவிப்பு செய்து அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி ஏராளமானோர் ஆவலுடன் காத்திருந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர் தெரிவிக்கையில், பழைய பொருட்கள் என்றுமே மதிப்புமிக்கவை என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டே இந்த அறிவிப்பை நாங்கள் வெளியிட்டோம். ஆனால் மக்களும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் 10 பைசா நாணயங்களுடன் குவிந்து விட்டனர். இதை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதும் அனைவருக்கும் ரூ.150 மதிப்புள்ள டி_ஷர்ட்டை வழங்கியுள்ளோம். இதுபோல் பழைய பொருட்களை சேமிப்பதை நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதுள்ள தலைமுறையினரும் பழைய பொருட்களின் அருமையை உணர வேண்டும் என்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பிரியாணிக் கடை உரிமையாளர் 5 பைசாவிற்கு அரை பிரேட் சிக்கன் பிரியாணி என்று அறிவித்தார். அப்போதும் 5 பைசா நாணயங்களுடன் ஏராளமானோர் வந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். இதுபோன்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பழைய நாணயங்களை சேமிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டி வருகிறது. இதனையடுத்து மேலும் ஒரு பிரியாணிக்கடை உரிமையாளர் தீபாவளிக்கு முதல் நாள் 20 பைசா நாணயம் கொண்டு வரும் நபர்களுக்கு அன்லிமிடெட் பிரியாணி வழங்குவதாக அறிவிப்பை வெளியிட உள்ளார். இதுபோன்ற அடுத்தடுத்த அறிவிப்புகள் திண்டுக்கல் நகரைச் சேர்ந்த மக்கள் பழைய நாணயங்களை  தேடித்தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து