முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற மாட்டார்கள் - டோனி எதிர்காலம் குறித்து கங்குலி கருத்து

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : டோனி இந்திய அணியில் விளையாடுவாரா என்பது புரியாத புதிராக உள்ள நிலையில் பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அதுகுறித்து பதில் அளித்துள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் டோனி. கேப்டன் பதவிகளில் இருந்து விலகிய அவர், தற்போது ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். சமீப காலமாக போட்டியை சிறப்பாக முடிப்பதில் டோனி திணறி வருகிறார். 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் டோனி சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. ஆனால், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள் ஓய்வு என்பது டோனியுடன் முடிவு. அவர்தான் ஓய்வு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் பி.சி.சி.ஐ. தலைவராக நேற்று பொறுப்பேற்ற சவுரவ் கங்குலியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கங்குலி, சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள். நான் அவருடன் இதுகுறித்து பேச இருக்கிறேன் என்றார். இதனால் டோனி தற்போது ஓய்வு பெற மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து