சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      சிவகங்கை
23 section 144

சிவகங்கை - சிவகங்கை மாவட்டம் முழுவதும் புதன்கிழமை (அக்.23) முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியார்; ஜெ.ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருதுபாண்டியார்;களின் நினைவு தினம் மற்றும் பசும்பொன் தேவார்; குரு பூஜை விழாவை முன்னிட்டு அஞ்சலி செலுத்தச் செல்வோர்; காவல் துறை அனுமதி மற்றும் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அக்டோபார்; 23 முதல் அக்டோபார்; 31 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து