முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி நெசவாளர்களின் தீபாவளி ஸ்பெஷ்சல் சேலை பொதுமக்கள் வரவேற்பு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி -:பரமக்குடி பகுதியில் நெசவாளர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.பரமக்குடி -எமனேஸ்வரம் பட்டு சேலை என்றால் தனி சிறப்பு.அதை மெய்யாக்கும் வகையில் பரமக்குடி நெசவாளர் சங்கத்தின் தயாரிப்பில் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி - சீன பிரதமர்  ஜின்பிங் சந்திப்பு படம்  சேலையாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர்  ஜின்பிங்கும் அக்.11,12 ம் தேதிகளில் சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர்.முன்னதாக, பிரதமர் மோடி இந்திய பாரம்பரிய உடையான வெள்ளை வேஷ்டி,சட்டை அணிந்து சீன அதிபர் ஜின்பிங்கை கைகுலுக்கி வரவேற்றார்.
 இதனை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மகாகவி பாரதியார் கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் தயாரிக்கும் சேலையில் நெசவு செய்து தீபாவளி ஸ்பெஷலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.பட்டு சேலை தயாரிப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து