முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்தக் கறை படிந்த சிரிய மண்ணில் இருந்து வெளியேறுகிறோம்: டிரம்ப்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : சிரியாவின் குர்து போராளிகள் பகுதியை துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் கைப்பற்றியதை அடுத்து ரத்தக்கறை படிந்த சிரிய மண்ணில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியான பின்னர் அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி  அரசு போர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. குர்து போராளிகள், பொதுமக்கள் என 600-க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில்  கொல்லப்பட்டனர். அமெரிக்கா உள்பட பல நாடுகள் தாக்குதலை நிறுத்துமாறு எச்சரித்தும் துருக்கி தனது போர் நடவடிக்கைகளை  நிறுத்தவில்லை. இதனால் அமெரிக்கா துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது.  இதையடுத்து கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், துருக்கி அரசு 5 நாள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. குர்து போராளிகளும் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறுவதாக ஒப்புக்கொண்டனர். 5  நாட்கள் முடிவடைந்த நிலையில், குர்துகள் மீதான போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடர வேண்டிய அவசியம் இருக்காது என  துருக்கி அரசு தெரிவித்தது. சிரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினும், துருக்கி அதிபர் எர்டோகனும் இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தினர். பாதுகாப்பு வளையத்தில் இருந்து மொத்த குர்து படைகளையும் வெளியேற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது என  தகவல்கள் வெளியாகின.  மேலும், அமெரிக்கா குர்து போராளிகளை காட்டிக்கொடுத்து, துரோகம் செய்ததாக டிரம்ப் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், குர்துகளுக்கு துரோகம் செய்ததாக எழுந்த  குற்றச்சாட்டு உண்மையில்லை. அமெரிக்க படைகள், குர்து போராளிகளுடன் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடியது.  சிரியா விவகாரத்தில் ரஷ்யாவும் துருக்கியும் ஒன்றிணைந்துள்ளன. ரத்தக் கறை படிந்த அந்த நிலத்தில் வேறு யாராவது போர் நிகழ்த்தட்டும். அமெரிக்கா சிரியா விவகாரத்தில் இருந்து முற்றிலும் விலக  முடிவு செய்துள்ளது. துருக்கி மீதான பொருளாதார தடைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து