முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் தொடங்குவதற்குகந்த நாடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : தொழில் தொடங்க உகந்த நாடுகளுக்கான உலக வங்கியின் தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா, 63-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2014-ம் ஆண்டில் நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற போது தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 190 நாடுகளில் 142-வது இடத்தில் இந்தியா இருந்தது. 2017-ம் ஆண்டில் 130-வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா, 2018-ல் 100-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது. 2019-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் 77-வது இடத்தை இந்தியா பிடித்தது. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் 14 இடங்கள் முன்னேறியுள்ள இந்தியா 63-வது இடத்தில் உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்குவதற்காக சிறப்பாக செயல்படும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தியா முதல் 10 இடங்களில் உள்ளது. இதுபோன்ற வெற்றியை கடந்த 20 ஆண்டுகளில் மிகச் சில நாடுகளே பெற்றிருப்பதாகவும், அவை மக்கள் தொகை வாரியாக சிறிய நாடுகள் என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், அந்நிய முதலீடு ஈர்ப்பு, உற்பத்தி துறை ஊக்குவிப்பு மட்டும் அல்லாமல், போட்டித் திறன் அதிகரித்திருப்பதாகவும் உலக வங்கி கூறியுள்ளது. இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் முதல் 50 இடங்களை இந்தியா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக உலக வங்கி கணித்துள்ளது. தொழில் தொடங்க உகந்த சூழலை உருவாக்குவதற்காக சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலில் சவுதி அரேபியா(62), ஜோர்டான்(75), தோகோ(97), பஹ்ரைன்(43), தஜிகிஸ்தான்(106), பாகிஸ்தான்(108), குவைத்(83), சீனா(31), நைஜீரியா(131) ஆகிய நாடுகளும் உள்ளன. கணிசமான முன்னேற்றம் காணப்பட்டாலும், ஒப்பந்தங்களை அமல்படுத்துதல் (163வது) மற்றும் சொத்துக்களை பதிவு செய்தல் (154வது) போன்ற பிரிவுகளில் இந்தியா இன்னும் பின்தங்கியிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து