முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: முதல்வர் இபிஎஸ் அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : உள்ளாட்சித்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
கேள்வி:- உள்ளாட்சித் தேர்தல் தேதி எப்பொழுது அறிவிக்கப்படும்?
பதில்:- உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அது தன்னாட்சி பெற்ற அமைப்பு, அதில் அரசு தலையிடாது. உச்சநீதிமன்றம் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் விரைவாக தேர்தலை நடத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:- உள்ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடருமா?
பதில்:- தொடரும்.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வந்திருக்கிறது. ஆகவே, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் அதை விரைவாக குணப்படுத்தவதற்கும் நான் லண்டன் சென்ற பொழுது, அங்கே ஆய்வுக் கூடத்திற்கு சென்று நான் பார்வையிட்டேன். சுமார் 200 விஞ்ஞானிகள் இந்த ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தக் கொசு எப்படி உற்பத்தியாகிறது? அந்த லார்வா-வை எப்படி அழிப்பது? கொசு வந்த பிறகு அதை எப்படி அழிப்பது? கொசு கடித்த பிறகு காய்ச்சல் வந்தால் அதை எப்படி குணப்படுத்துவது? இதற்கெல்லாம் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், அது விரைவாக செயல்படுத்தப்படும். ஆகவே, மக்கள் விழிப்போடு இருந்து காய்ச்சல் வந்தவுடனேயே அருகிலிருக்கின்ற அரசு மருத்துவமனையில் தங்களை பரிசோதித்து உரிய சிகிச்சை பெற்றுக் கொண்டால் டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபடலாம். ஆனால், காய்ச்சல் வந்து ஒரு நான்கைந்து நாட்கள் கழித்து சிகிச்சை பெறுகின்ற பொழுதுதான் அவர்கள் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். ஆகவே, ஊடகத்தின் வாயிலாக பொதுமக்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து