முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன்ஸ் லீக்கில் வரலாற்று சாதனைப் படைத்தார் மெஸ்சி

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

யூரோ : பார்சிலோனா கேப்டன் மெஸ்சி தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. இவர் பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடி வருகிறார். யூரோ சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா ஸ்லாவியா பிராக் அணியை எதிர்கொண்டது. இதில் 2-1 என பார்சிலோனா வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே மெஸ்சி கோல் அடித்தார். இந்த கோல் மூலம் தொடர்ச்சியாக 15 சாம்பியன்ஸ் லீக் சீசனில் குறைந்தது ஒரு கோலாவது அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் எந்தவொரு வீரரும் இந்த சாதனையை செய்தது கிடையாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து