முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி-கோலி, ரோகித்துடன் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : பி.சி.சி.ஐ. தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட சவுரவ் கங்குலி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்று கொண்டார். அதே போல் மற்ற நிர்வாகிகளும் பதவி ஏற்று்க் கொண்டனர்.அப்போது கங்குலி கூறும் போது, கேப்டன் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் முக்கிய நபராக இருக்கிறார். அவருக்கு உதவுவதற்காகதான் நான் இருக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் வங்காளதேச தொடருக்காக இந்திய அணியை தேர்வு செய்ய நேற்று முன்தினம் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் ஆலோசித்தனர். இதில் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றனர்.வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியை ரோகித் சர்மா வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் நிர்வாகிகளுடன் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். மேலும் டோனியின் எதிர்காலம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறும் போது, கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கேப்டன் கோலியையும், துணை கேப்டன் ரோகிர் சர்மாவையும் சந்திக்க விரும்பினர். இதில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்த கருத்துகள் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது என்றார். கங்குலியுடனான சந்திப்பில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பங்கேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து