முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி கொண்டாடிய அமெரிக்க எம்.பி.க்கள்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாராளுமன்ற எம்.பி.க்கள் தீபாவளி திருநாளை கோலாகலமாக கொண்டாடினர்.

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி இந்தியா முழுவதும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இந்துக்களும் தீபாவளி பண்டிகையை அந்நாடுகளில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.  அமெரிக்கா அதிபர் உள்ளிட்ட சில உலக தலைவர்களும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாராளுமன்ற எம்.பி.க்களான ஹாரிஸ், பிரமிளா ஜெயபால், ராஜா  கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா மற்றும் அமி பெரா ஆகியோர் நேற்று தீபாவளி கொண்டாடினர்.  இது குறித்து கமலா ஹாரிஸ் கூறுகையில், எங்கள் சமூகங்களை இருளிலிருந்து உயர்த்தவும், விரக்தியை விட்டு நம்பிக்கையுடன்  வாழவும் தீபாவளி திருவிழா எங்களுக்கு ஊக்கமளிக்கட்டும். பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான  சந்தர்ப்பத்தில் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறினார். மற்றொரு எம்.பி.யான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இந்த விழா இருளின் மீதான ஒளியின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது,  மேலும் தீமையை நன்மை வென்றது என்பதையும் எடுத்துரைக்கிறது என தெரிவித்தார். இந்திய வம்சாவளி எம்.பி.க்களுடன் அமெரிக்க எம்.பி.க்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து