முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை; 21 பேர் பலி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

பாக்தாத் : ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலியாகி உள்ளனர்.

ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.  அந்நாட்டில் அரசு அலுவலகங்களில் காணப்படும் ஊழல், அதிகரித்து உள்ள வேலை வாய்ப்பின்மை மற்றும் பொது சேவை பணிகள் ஆகியவற்றால் பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து உள்ளனர். இதனையடுத்து அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.  அரசு பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  புதிய அரசியலமைப்பு வேண்டும்.  அப்படி இல்லையெனில் எதுவும் மாறாது.  பழைய அரசியலமைப்பினால் வகுப்புவாத விவகாரங்கள் எழுந்துள்ளன என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூறியுள்ளார். அவர்களை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு படைகளை அரசு பயன்படுத்தியுள்ளது.  கலவரக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஈராக்கிய போலீசார் ரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் உயிரிழந்து உள்ளனர்.  1,700 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து