முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் மக்கள் திண்டுக்கல் பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - தீபாவளி பண்டிகை முடிந்து ஊருக்கு ஒரே நேரத்தில் மக்கள் திரும்பியதால் திண்டுக்கல் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. சென்னை, பெங்களூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருந்தன. மேலும் தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன. அனைத்து பஸ் மற்றும் ரெயில்களிலும் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலே முடிந்து விட்டன. இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தனியார் பஸ்களில் பயணம் மேற்கொண்டனர். எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் விடுமுறை முடிந்து மீண்டும் வேலைக்கு திரும்பும் மக்களின் நலன் கருதியும் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதனையொட்டி நேற்று மதியம் முதல் பல்வேறு ஊர்களில் இருந்து ஊருக்கு திரும்ப பஸ் மற்றும் நிலையங்களில் மக்கள் குவியத் தொடங்கினர். திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், சென்னை போன்ற ஊர்களுக்கு செல்லும் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பினர். மேலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மழைக்கு முன்பாக ஊருக்கு திரும்புவதற்காக மதியம் முதல் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ரெயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமின்றி முன்பதிவுசெய்யாதவர்களும் ரெயில் படியில் அமர்ந்தவாறு பயணித்தனர். மேலும் அப்பர் பெர்த்_இல் 2க்கும் மேற்பட்ட பயணிகள் நெருக்கடியில் அமர்ந்தவாறு பயணித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து