முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கப்பலூர் டோல்கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! ஆமை வேகத்தில் நகர்ந்த வாகனங்களால் பொதுமக்கள் அவதி!!

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்றிடும் நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட்டில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து ஆமை வேகத்தில் நகர்ந்ததால் வாகனஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்கு ஆளாகினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை கிடைத்ததால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று தீபஒளி திருநாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பேருந்துகளிலும்,கார்களிலும்,வேன்களிலும் ஒரே சமயத்தில் திரும்பிச் சென்றனர்.இதன் காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி,சென்னை மற்றும் பெங்களுரு நோக்கிச் சென்றிடும் நான்குவழிச்சாலை அனைத்திலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்து ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனை ஆங்காங்கேயுள்ள போக்குவரத்து போலீசார் மற்றும் ஹைவே பேட்ரோல் போலீசார் சீர்செய்து வாகனப் போக்குவரத்து தங்கு தடையின்றி செல்ல உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் நான்குவழிச்சாலை டோல்கேட்டில் நேற்று காலை முதலே வாகனங்களில் இயக்கம் அதிகமாக காணப்பட்டது.தீபாவளி பண்டிகை சமயத்தில் டோல்கேட்டை கடந்து சென்றிடும் வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திட வாய்ப்புகள் உள்ளது என்பதை அறிந்தும் டோல்கேட் நிர்வாகம் கூடுதலாக பணியாளர்களை பணியமர்த்தி சிறப்பு ஏற்பாடுகளை செய்திடாமல் கட்டண வசூலில்மட்டுமே குறியாக இருந்தனர்.இதனிடையே நேற்று மாலை நேரம் செல்லச் செல்ல வாகனங்களின் கூட்டம் கடுமையாக அதிகரித்ததால் செய்வதறியாது திகைத்துப்போன டோல்கேட் ஊழியர்கள்  தங்களது பணிகளை விரைவாக செய்திட இயலாமல் தவித்தனர்.இதன் காரணமாக கப்பலூர் டோல்கேட்டில் மதுரை நோக்கிச் சென்றிடும் பாதையில் ஒருகிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக  நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்க நேரிட்டதுடன் அப்பகுதி முழுவதிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்;பட்டது.
இதன் காரணமாக ஒவ்வொரு வாகனமும் கப்பலூர் டோல்கேட்டை ஆமை வேகத்தில் கடந்து சென்றிட சுமார் 30நிமிடங்கள் வரை ஆனதால் வாகனஓட்டிகளும்,பொதுமக்களும் வாகனங்களில் அமர்ந்தபடி நீண்ட நேரம் காத்துக்கிடந்து பெரும் அவதிக்கு ஆளானார்கள்.அதே போல் வாகனங்களில் வருபவர்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் இங்கு செய்யப்படாததால் பயணிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளானார்கள்.இதற்கு வசூலை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தின் அலட்சியமே காரணமென வாகனஓட்டிகள் புலம்பியபடி சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து