முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெற்கு பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

தெற்கு பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தெற்கு பிலிப்பைன்சில் நேற்று காலை  6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய மிண்டானாவோவை  மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது.  வீட்டில் இருந்தவர்களும் பள்ளி கூடங்களில் இருந்து மாணவ மாணவிகளும்  அலறி அடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர்.

இந்த நிலநடுக்கம் துலுனனுக்கு வடகிழக்கில் 26 கிமீ   தொலைவில் காலை 9:04 மணிக்கு ஏற்பட்டதாக  பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் (பிவோல்க்ஸ்) தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டிடங்களுக்கு வெளியே இருக்குமாறு பிவோல்க்ஸ் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலநடுக்கம் அருகிலுள்ள மாகாணங்களையும், அதிபர் ரோட்ரிகோ டூர்ட்டேவின் சொந்த ஊரான டாவோ சிட்டி உள்ளிட்ட நகரங்களையும், நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் உலுக்கி உள்ளது. பிலிப்பைன்சில் பூகம்பங்கள் பொதுவானவை, இது புவியியல் ரீதியாக செயல்படும் பசிபிக் நெருப்பு வளையம் பகுதியில் உள்ளது. கடந்த 16-ம் தேதி 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் மத்திய மிண்டானாவோவைத் தாக்கியது,  ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் அதிகமானவர்கள்  காயமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து