முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச கேப்டன் ஹசனுக்கு 2 ஆண்டுகள் விளையாட தடை

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஊழல் தடுப்பு விதிமுறையின் மூன்று வகையான குற்றச்சாட்டில் ஷாகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது ஐ.சி.சி.

வங்காளதேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது சூதாட்டக்காரர்கள் ஷாகிப் அல் ஹசனை நாடியுள்ளனர். அதேபோல் ஐ.பி.எல். தொடரில் விளையாடும்போதும் நாடியுள்ளனர். இதுகுறித்த விஷயம் ஐ.சி.சி.-யின் ஊழல் தடுப்புப் பிரிவிற்கு தெரியவந்தது. இதனால் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஷாகிப் அல் ஹசன் தனது மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார். இதனால் ஓராண்டு சஸ்பெண்ட் உடன் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட ஐ.சி.சி. ஷாகிப் அல் ஹசனுக்கு தடைவிதித்துள்ளது.

மேலும், ஷாகிப் அல் ஹசன் தடைக்காலத்தின் ஒரு பகுதியான சஸ்பெண்ட் கண்டிசனை ஒத்துக்கொண்டால், மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக அடுத்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளது. இந்த தடைகுறித்து ஷாகிப் அல் ஹசன் விடுத்துள்ள அறிக்கையில், மிகவும் விரும்பும் விளையாட்டில் எனக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கி்றது. ஆனால், என்னை அணுகியது குறித்து தகவல் தெரிவிக்காததற்கு இந்த தடை என்பதை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து