முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடந்தால் வாழ்க்கையில் உயரலாம் ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி பேச்சு

புதன்கிழமை, 30 அக்டோபர் 2019      தேனி
Image Unavailable

தேனி -  தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கம் சார்பில் கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பில் நன்மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல், நலிவடைந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.   தேனி திண்ணை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி வாழ்த்துரை வழங்கினார். கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பணிக்குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுதல் மற்றும் ஊக்கத்தொகை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது  குரு என்பதை பிரித்தால் கு என்பது அறியாமையாகிய இருள் என்றும், ரு என்பது அறிவாகிய வெளிச்சம் என்று பொருள். குரு என்றால் அறியாமையாகிய இருளை அகற்றி அறிவாகிய வெளிச்சத்தை கொண்டு வருபவர் ஆகும். மற்றவர்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படாதவர்கள் ஆசிரியர்களே. என் மீது நம்பிக்கை வைத்து என்னை தேனி பாராளுமன்ற உறுப்பினர்களாக நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். நான் தேர்தல் நேரத்தில் கூறியது போல் தேனி தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். அதற்கு நான் மட்டுமல்ல நீங்களும் எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தேனி தொகுதி வளர்ச்சிக்காக  தேனி விஷன் என்ற அலைபேசி செயலியை ஆரம்பித்துள்ளேன். அதில் உங்கள் பகுதியில் உள்ள குறைகள், நமது பகுதி வளர்ச்சிக்கான ஆலோசனைகள், ஒவ்வொரு துறையிலும் தனது திறமையால் தனித்துவம் பெற்றவர்களை அடையாளம் காட்டுதல் என உங்களுடன் நான் ஓபிஆர் செயலியில் நீங்கள் தெரிவித்தால் உடனடியாக எனது கவனத்திற்கு வரும்.  குறைகளை நிவர்த்தி செய்து வளர்ச்சியடைய செய்யவும், தனித்துவம் மிக்கவர்களை வெளி உலகத்திற்கு அடையாளம் காட்டவும் முயற்சி செய்வேன். நமது சமுதாயத்திற்காக நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். கடந்த முதல் கூட்டத் தொடரில் தொகுதி வளர்ச்சிக்காக, தமிழகத்திற்காக 28 மசோதாக்களில் பேசியிருக்கின்றேன். பிரதமர் மற்றும்  உரிய அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். நமது புனித நூலான பகவத் கீதையில் துரோணாச்சாரியர் தனது  மாணவர்களில் தனித்துவம் மிக்க மாணவராக  திகழ்ந்த அர்ஜுனனை போல, பள்ளியால் மூளை குறைபாடுடையவர் என கைவிடப்பட்ட மாணவனை அவருடைய தாய் தனது அறிவு மற்றும் அன்பால் உயர்ந்து இன்று உலகம் முழுவதும் போற்றப்படுகின்ற மின்சாரம் உள்ளிட்ட 1093 கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் போல,   உங்களின் முயற்சிக்கு  ஆதரவாக உறுதுணையாக இருக்கின்ற பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடந்தால் நீங்களும் வாழ்க்கையில்  உயர்ந்த நிலையை அடையலாம். சுவாமி விவேகானந்தர் கூறியதுபோல எதை பெற விரும்பினாலும் உயிர்கள் அதனை பெற போராடியாக வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். உங்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம். மாதா, பிதா, குரு தெய்வம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுங்கள். சத்துணவு தந்த புரட்சித்தலைவர், சத்துணவு திட்டத்திற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே 40 ஆயிரம் தந்த  பரட்சித்தலைவி அம்மா அவர்கள், தனது ஆட்சிகாலத்தில் மடிக்கணினி, புத்தகம் உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் வழங்கினார். அவருடைய வழியில் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் இத்திட்டங்கள் குறையாமல் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். மாணவ செல்வங்கள் நாளைய சிறந்த சமுதாயமாக, வரலாறாக திகழ வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அபுதாஹீர், நகர துணை செயலாளர் அப்துல்சமது, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்க கௌரவ ஆலோசகர் சரவணன், தலைவர் பாண்டி, செயலாளர் கார்த்தி, பொருளாளர் முரளிதரன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து