முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷகிப் அல் ஹசனுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: முன்னாள் வீரர் கருத்து

புதன்கிழமை, 30 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மேட்ச் ஃபிக்ஸிக் முறைகேடு புரிய அணுகியவா்கள் தொடா்பாக தகவல் தெரிவிக்காத காரணத்துக்காக வங்கதேச டி20, டெஸ்ட் அணி கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. அவருக்கு கிரிக்கெட் விளையாட ஓராண்டு முழு தடையும், 12 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையும் அளிக்கப்பட்டுள்ளது. ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டதால் மஹ்முதுல்லா டி20 அணியின் கேப்டனாகவும் மொமினுல் ஹக் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் 2 வருடத் தண்டனை போதாது என்று ஐ.சி.சி.யின் முடிவை விமரிசித்துள்ளார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் எழுதிய பதிவு வருமாறு:- ஷகிப் அல் ஹசன் மீது எந்த அனுதாபமும் இல்லை. இந்தக் காலக்கட்டத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏதாவது நடந்தால் வீரர்கள் நேராகப் புகார் அளிக்கவேண்டும். 2 வருடத் தண்டனை போதாது.

இன்னும் அதிகமாக இருந்திருக்கவேண்டும். என்னை மோசமாகப் பேசுபவர்களுக்கு - ஊழலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. இந்தக் கால வீரர்களுக்கு என்ன செய்யவேண்டும், செய்யக்கூடாது என்பது நன்குத் தெரியும். எது நடந்தாலும் புகாரளிக்க வேண்டும் என்பதும் தெரியும். அப்படிச் செய்யாவிட்டால் பின்விளைவுகள் என்ன என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து