முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து - பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கராச்சி - ராவல்பிண்டி இடையே தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று காலை ரகிம் யார் கான் அருகே உள்ள லியாகத்பூரில் சென்று கொண்டிருந்த போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அருகில் உள்ள 2 பெட்டிகளுக்கும் தீ பரவியது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகவும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் காலை உணவு சமைத்த போது, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என பாகிஸ்தான் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து