முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுற்றுச்சூழல் விருதினை புறக்கணித்த கிரெட்டா

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பருவ நிலை மாற்றம், சூழலியல் கேடு தொடர்பாக ஐ.நா.வில் உலகத் தலைவர்கள் முன்னிலையில் விமர்சித்து பேசிய சுவீடன் நாட்டு பருவநிலை மாற்றத்துக்கு எதிரான இயக்கத்தைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா துன்பெர்க் நார்டிக் கவுன்சிலின் 2019-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதினை கடும் விமர்சனத்துடன் புறக்கணித்தார்.

அரசியல்வாதிகளும் அதிகாரத்தில் உள்ளவர்களும் நடப்பு அறிவியல்களை, பருவநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகளை விமர்சனங்களைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று கிரெட்டா சாடினார். வானிலை நீதி போராட்ட இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளரான இந்தச் சிறுமி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன் பள்ளிப் படிப்பை துறந்து சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். உலக ஆய்வறிக்கை ஒன்றைச் சுட்டிக் காட்டி கிரெட்டா துன்பெர்க் கூறும் போது, நார்வே அரசு சமீபமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க எண்ணற்ற அனுமதிகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் கரியமிலவாயு வெளியேற்றம் 1.3 டன்களாக அதிகரிக்கும். புவிவெப்பமடைதல் பருவ நிலை சீரழிவுகள் பற்றி அறிவியல் கூறுவதற்கும் நார்டிக் அரசுகள் செய்யும் வேலைகளுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. மாற்றங்களுக்கான அறிகுறி கூட தென்படவில்லை என்று சாடினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து